தினந்தோறும் 'பேங்க் பேலன்ஸை' சரிபார்க்கிறேன்: தயாநிதி மாறன்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
‛‛ தினந்தோறும், என் வங்கிக் கணக்கை சரிபார்த்துக் கொண்டே இருக்கிறேன்; பிரதமர் மோடி போடுவதாக சொன்ன, 15 லட்ச ரூபாய் இதுவரை வந்துசேரவில்லை,'' என, தயாநிதி மாறன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.லோக்சபாவில், அங்கீகாரமற்ற டில்லி குடியிருப்புகளை முறைப்படுத்தும் மசோதா மீது, தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறன் பேசியதாவது: கிராமங்களில் வசிப்போர், வேலைவாய்ப்பு தேடி, நகரத்திற்கு வரும்‛‛ தினந்தோறும், என் வங்கிக் கணக்கை சரிபார்த்துக் கொண்டே இருக்கிறேன்; பிரதமர் மோடி போடுவதாக சொன்ன, 15 லட்ச ரூபாய் இதுவரை வந்துசேரவில்லை,'' என, தயாநிதி மாறன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபாவில், அங்கீகாரமற்ற டில்லி குடியிருப்புகளை முறைப்படுத்தும் மசோதா மீது, தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறன் பேசியதாவது:
கிராமங்களில் வசிப்போர், வேலைவாய்ப்பு தேடி, நகரத்திற்கு வரும் நிலை உள்ளது. அம்மக்கள் குடியேறும், அங்கீகாரமற்ற குடியிருப்புகளை முறைப்படுத்துவது, இந்தியாவிலேயே, முதன் முறையாக, தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டது.
‛ஏழையின் சிரிப்பில் இறைவனை காப்போம்' என்ற முழக்கத்துடன், குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது. மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெகஜீவன் ராம், சென்னைக்கு வந்து இவற்றை பார்த்துவிட்டுத்தான், டில்லியில் ‛இந்திரா ஆவாஜ் யோஜனா' என்ற திட்டத்தை வகுத்தார். பா.ஜ.வோ., அதை ‛பிரதமர் ஆவாஜ் யோஜனா' என, மாற்றிச் சொல்கிறது. அனைத்துக்குமே, தமிழகம்தான் முன்மாதிரி.
டில்லியில், குடியிருப்புகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கையை, மத்திய அரசு, டில்லி சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் எடுக்கிறது. அதையும், முழு மனதோடு செய்யாமல், அரைகுறையாக செய்கிறது.
தேர்தலையொட்டி, பிரதமர் அளித்த வாக்குறுதியின்படி, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும், 15 லட்ச ரூபாய் போட்டிருக்க வேண்டும். நான் தினந்தோறும், என் வங்கி கணக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். எந்தப் பணமும், வந்து சேரவில்லை. எனவே, ஓட்டுக்காக எதையும் செய்யாமல், மக்களின் வளர்ச்சிக்காக செய்யுங்கள்.
இவ்வாறு, தயாநிதிமாறன் பேசினார்.

'வியாபாரிகளை காப்பாற்றுங்கள்'

கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமார் பேசியதாவது:‛ஆன்லைன்' வர்த்தகம் காரணமாக, சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் ஆன் லைன் வணிக நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல், சிறு வணிகர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. எனவே, 4.5 கோடி வியாபாரிகளை காப்பாற்ற, ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

நமது டில்லி நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
29-நவ-201916:27:02 IST Report Abuse
Subbanarasu Divakaran இந்த பெருந்தகை 300 கு மேற்பட்ட டெலிபோன் காங்நேச்டின் தன வீட்டிற்கும் அண்ட் முரசொலி ஆபீஸ் கும் திருடையது யாருக்கும் மறக்க mudiyaadu
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
29-நவ-201915:07:23 IST Report Abuse
s.rajagopalan என்னையா இப்படி காமெடி பண்றீங்க ? நீங்க நெனெச்சா இதை ஒரே நாளில் செஞ்சுடுவீங்க தேவைப்பட்டால் மேலும பணத்தை எப்படி அள்ளுவது எப்படீன்னு உங்களுக்கு தெரியும். மோடிக்கு இந்த வித்தை தெரியவில்லையே ?
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
29-நவ-201912:52:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வெளி நாட்டு கருப்பு பணம் மீட்கப்பட்டால் எல்லோர் கணக்கிலும் 15 லட்சம் போடலாம் என்றுதான் சொன்னார். இது கூட புரியாதவனெல்லாம் பாராளுமன்ற உறுப்பினகியுள்ளான். அப்படி போட்டாலும் மோடி ஏழைகளின் கணக்கில்தான் போடுவார் கொள்ளைக்காரன் கணக்கில் போடா மாட்டார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X