சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.,வினர் கைது

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:கோவை மாநகராட்சியில், நிறுத்தி வைக்கப்பட்ட சொத்து வரி உயர்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில், தெற்கு தாலுகா அலுவலகம் முன், நேற்று, தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம், வடக்கு மாவட்ட துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை, போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற பலரும், தங்களது மொபைல் போனில், 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X