மாவட்ட அளவிலான சதுரங்கம் வர்னிகா, ஹிதேஷ்குமார் முதலிடம்

Added : நவ 29, 2019
Advertisement
 மாவட்ட அளவிலான சதுரங்கம் வர்னிகா, ஹிதேஷ்குமார் முதலிடம்

சென்னை:மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில், வர்னிகா மற்றும் ஹிதேஷ்குமார் முதலிடம் வென்றனர்.
தமிழ்நாடு சதுரங்க சங்கம் சார்பில், மாநில அளவிலான சதுரங்க போட்டி, ஜனவரியில் துவங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான, மாவட்ட அளவிலான போட்டி, பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.இதில், திருவள்ளூர் மாவட்டம் சார்பில், சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, மேற்கு அண்ணா நகர், எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சமீபத்தில் நடந்தது.இதில், 7 வயதிற்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில், வர்னிகா; சிறுவர்கள் பிரிவில், ஹிதேஷ்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

அதேபோல, 13 வயதிற்கு உட்பட்ட சிறுமியர் பிரிவில், லஷ்மணா; சிறுவர்கள் பிரிவில், சூர்யா ஆகியோர் முதலிடம் வென்றனர்.பெண்கள் ஓபன் பிரிவில், அக்ஷயா முதலிடமும், சுவாதி இரண்டாம் இடமும் பெற்றனர்.இந்த போட்டியில், பெண்கள் பிரிவில், முதல் நான்கு இடங்கள் மற்றும் இதர பிரிவுகளில், முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள், மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X