அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தது நாங்கள்' கி.கிரி.,யில் அரசியல் கட்சிகள் போட்டா போட்டி

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிருஷ்ணகிரி :'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, மருத்துவக் கல்லுாரியை நாங்கள் தான் கொண்டு வந்தோம்' எனக்கூறி, அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சமூக வலைதளங்களில், தகவல் பரப்பி வருகின்றனர்.ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல், இங்கு அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் சட்டக்கல்லுாரி கொண்டு வர, கோரிக்கை வலுத்தது.


கிருஷ்ணகிரி :'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, மருத்துவக் கல்லுாரியை நாங்கள் தான் கொண்டு வந்தோம்' எனக்கூறி, அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, சமூக வலைதளங்களில், தகவல் பரப்பி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது முதல், இங்கு அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் சட்டக்கல்லுாரி கொண்டு வர, கோரிக்கை வலுத்தது. இது குறித்து, கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.,க்கள் லோக்சபாவிலும், எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை பேசினர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லுாரி துவங்க, மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. அன்று மாலை, கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில், 'கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, அ.தி.மு.க.,தான் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி, மருத்துவக்கல்லுாரி கொண்டு வந்தது' என, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
இதே நேரத்தில், மருத்துவ கல்லுாரி கொண்டு வந்த ஸ்டாலினுக்கும், மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவனுக்கும் நன்றி தெரிவித்து, தி.மு.க.,வினரும், செல்லகுமார் எம்.பி.,தான் போராடி மருத்துவக்கல்லுாரி கொண்டு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி என, காங்., கட்சியினரும், சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வருகின்றனர்.
இதையெல்லாம் பார்த்த, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், மருத்துவக்கல்லுாரி கொண்டு வர, எந்த கட்சி பாடுபட்டிருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம், என மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-201907:48:41 IST Report Abuse
இன்னாசிமுத்து கீதாரியார் யார் ஆட்சியில் ஒழுங்காக கட்டி முடிக்கிறார்களோ அவர்களே ..உரிமை கொண்டாடலாம் ? சரி இவர்கள் ஏதோ அவர்களின் சொந்த காசை செலவுசெய்து கட்டியது போலல்லவா பேசுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X