சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் படத்தில், 'மார்பிங்' இருவரிடம் தீவிர விசாரணை

Added : நவ 29, 2019
Advertisement

கோவை, :பிரதமருடன் இருப்பது போன்ற போட்டோவை, 'மார்பிங்' செய்த இருவரை, 'சைபர் க்ரைம்' போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.கோவை, பீளமேடுபுதுாரைச் சேர்ந்தவர் கவி தமிழ்செல்வன், 47; தன்னை நுகர்வோர் அமைப்பு நிர்வாகி எனக் கூறி, அரசு துறை கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அப்போது, உயரதிகாரிகளுடன், 'செல்பி' எடுத்து, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி, தனக்கு அனைத்து துறை அதிகாரிகளும் நெருக்கமாக இருப்பது போன்று, காட்டி வந்துள்ளார்.கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்து, சீன அதிபருடன் உரையாடும் புகைப்படத்தை, 'மார்பிங்' செய்து, பிரதமருடன் இவர் கைகுலுக்குவது போன்று மாற்றி, சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். மாநகர சைபர் க்ரைம் போலீசார் நேற்று, கவி தமிழ்செல்வனை அழைத்து விசாரித்தனர். 'மார்பிங்' செய்து தந்தது, சிங்காநல்லுார், வரதராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேசேகரன், 45, என தெரிவித்தார்.இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 'விசாரணை முடிவில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X