கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ. 3.5 கோடி மோசடி7 பேருக்கு 2 ஆண்டு

Added : நவ 29, 2019
Advertisement


கோவை, :வங்கியில் கடன் வாங்கி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஏழு பேருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருப்பூரில், 'தானாஜி கார்மென்ட்ஸ்' என்ற பெயரில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வந்த பாண்டியராஜ், 57, அங்குள்ள கனரா வங்கியின், எஸ்.எஸ்.ஐ., கிளையில் கடன் வாங்க விண்ணப்பித்தார். அவருக்கு, 2002ல், 3.5 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.
வங்கி அதிகாரிகள், அவர் கொடுத்த நிலத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை போலி என்றும், இல்லாத நிலத்தின் பேரில், கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதற்கு வங்கி கிளை மேலாளர் சங்கரகுமார், 72, உடந்தையாக இருந்தது தெரிந்தது.
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து, வங்கி அதிகாரி சங்கரகுமார், பாண்டியராஜ், உடந்தையாக இருந்த அனித்ரா பாண்டியராஜ், 50, சிவகுருநாதன்,63, நாகேந்திரன்,56, கருப்பையா,54, சந்தானகுமார், 50, உட்பட 11 பேர் மீது, கோவை சி.பி.ஐ., கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர். 16 ஆண்டுகளாக விசாரணை நடந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கரகுமார், பாண்டியராஜ், அனித்ரா, சிவகுருநாதன், நாகேந்திரன், கருப்பையா, சந்தானகுமார் ஆகியோருக்கு, தலா ஏழு ஆண்டு சிறை, மொத்தம், 4.7 லட்சம் அபராதம் விதித்து, நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X