சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முகமூடி கொள்ளையர் வீடு புகுந்து நகை பறிப்பு

Added : நவ 29, 2019
Advertisement

கோவை, :கோவையில் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி நபர்கள், பெண்களிடம் நகைகளை பறித்து தப்பியது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சிட்ரா, பிருந்தாவன் நகரை சேர்ந்த அப்பாவு மகன் தினேஷ் குமார், 27; இவரது மனைவி சவுமியா, 25. இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். நேற்று முன்தினம் இவர்கள் ஒரு அறையிலும், தினேஷ் தாய் ராணி, 50 மற்றொரு அறையிலும் படுத்து துாங்கி கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை, 2.00 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு பேர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சவுமியா கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் நகை மற்றும் ராணி கழுத்திலிருந்த, 5 சவரன் நகையை பறித்தனர்.
அவர்கள் சப்தம்போடவே இருவரும் நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முகமூடி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
போலீசார் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி, கொள்ளையரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X