கோவை, :தற்கொலை செய்து கொண்ட பெண், டி.எஸ்.பி., விஷ்ணு பிரியாவின் தாயார், கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.நாமக்கல், டி.எஸ்.பி., விஷ்ணு பிரியா, போலீஸ் அதிகாரிகள், 'டார்ச்சர்' காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தந்தை ரவி புகார் அளித்தார். விசாரித்த, சி.பி.ஐ., புகாரில் போதிய ஆதாரமில்லை எனக் கூறி, வழக்கை கைவிடுவதாக கோர்ட்டில் தெரிவித்தது.இதற்கு, ரவி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதனால், நீதிமன்றமே தனி புகார் எடுத்து, ஏழு சாட்சிகளிடம், தாமாக முன் வந்து மறு விசாரணை நடத்த முடிவு செய்தது.இதன்படி, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் விசாரிக்கப்பட்ட நிலையில், அவரது தாயார் கலைச்செல்வி, கோவை, சி.ஜே.எம்., கோர்ட்டில் நேற்று ஆஜராகி, ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் வாக்குமூலம் அளித்தார்.