சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும் ரயிலில் ஏறியபோது தடுமாறிய பெண் காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு

Added : நவ 29, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ஓடும் ரயிலில் ஏறியபோது தடுமாறிய பெண் காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு


கோவை, :கோவை ரயில்வே ஸ்டேஷனில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறிய பெண்ணை, காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை - மங்களூர் இடையே இயக்கப்படும், 'இன்டர்சிட்டி' எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை, 6.40 மணிக்கு மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது. ரயில் புறப்பட்டு செல்லும் நேரத்தில் ஒரு பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ரயிலில் ஏற ஓடி வந்தார். குழந்தை மற்றும் கணவர் ரயில் பெட்டியில் ஏறிய நிலையில், கையில் பேக்குடன் பெண் ஏற முயன்றார்.
அப்போது நிலைதடுமாறி பிளாட்பாரம் - ரயில் பெட்டி இடையே விழுவது போல் சென்றார். இதை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பாலகிருஷ்ணன், 40 என்பவர் பார்த்து, சுதாரித்து விரைவாக செயல்பட்டு அந்த பெண்ணை பெட்டியின் உள்ளே துாக்கிவிட்டு காப்பாற்றினார்.
இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவ இடத்தில் விரைவாக செயல்பட்டு, பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரின் சிறப்பான பணியை பாராட்டி, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
02-டிச-201912:58:19 IST Report Abuse
sankar நன்றி நண்பரே
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
02-டிச-201906:28:23 IST Report Abuse
Pannadai Pandian ithu malayala chetanaakum….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X