சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

Added : நவ 29, 2019
Advertisement

பெரம்பலுார், :குடிமராமத்து பணியில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சிறு பாசன ஏரிகள், குளங்களில் குடிமராமத்துப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது. கலெக்டர் ஆய்வு செய்து முறைகேடு நடப்பதை தடுக்க வேண்டும்.
கொட்டரை நீர்த்தேக்கம் கட்டுமான பணிகளை விரைவாக முடித்து, விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X