கோவை:கோவை சிவில் இன்ஜினியர் அசோசியேசன் (கொசினா) சார்பில், தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் சிறப்பு கூட்டம், கோ-இண்டியா அரங்கில் நடந்தது; 'கொசினா' தலைவர் சரவணன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜெகதீசன் பேசியதாவது:இந்திய கட்டட கலையில் நாகரம், வேசரம், திராவிடம் என, மூன்று வகை உள்ளன. தென்னிந்திய கட்டட கலை திராவிடம் என்ற வகையை சேர்ந்தது. கட்டட கலை குறித்து சங்க இலக்கியத்தில், புறநானுாறு மற்றும் நெடுநெல் வாடை ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன.அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய சமூக அடையாளமாக கோவில் மட்டுமே இருந்தன. பெரிய கோபுரங்கள் கொண்ட கோவில்களை கட்டுவதும், அதை புதுப்பிப்பதும் அன்றைய அரசர்களின் முக்கிய பணியாக இருந்துள்ளன. இந்திய கட்டட கலை சிற்பக்கலையோடு தொடர்பு உடையது என்பதால், கலை நுட்பத்துடன் காட்சி அளிக்கிறது. வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற கட்டட கலை அமைப்பு இல்லை.இவ்வாறு, அவர் பேசினார். இந்தியா சிமென்ட் நிறுவன விற்பனை பிரிவு துணை தலைவர் வேலவன் மற்றும் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.