பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா நகரில் இன்று கிரயப் பத்திரம் முகாம்

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை:தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம், சென்னையில் இன்று நடக்க உள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் கீழ், குடிசை பகுதிகள், மேம்படுத்தப்பட்ட குடிசை பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.அங்கு வசித்து வந்தவர்களுக்கு, மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த நிலங்கள், வாரியம் பெயரில், நில உரிமை மாற்றம் செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டதும், ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கிரயப்பத்திரம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதன்படி, சென்னை, அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி தெரு, திட்டப்பகுதி ஒதுக்கீட்டுதாரர்களுக்கு, கிரயப்பத்திரம் வழங்கும் முகாம், அண்ணா நகர் மேற்கு, ஜே.ஜே.காம்ப்ளக்சில் உள்ள, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய எஸ்டேட் அலுவலகத்தில், இன்று நடக்க உள்ளது.ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள், முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். ஒதுக்கீடுதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள், தாங்கள் அளிக்கும் மனுவுடன், ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிட சான்றுகளாக, உணவு பங்கீடு அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.வாரிசுதாரர்களாக இருந்தால், ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ், மனைக்கு முழு கிரயம் செலுத்திய ரசீது ஆகியவற்றை இணைத்து வழங்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X