தமிழ்நாடு

திருச்சி ரோடு போக்குவரத்து நெரிசல் தீர இப்படியும் செய்யலாம்! இருபுறமும் ஒரு வழியாக்க ஆலோசனை

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019
Advertisement
 திருச்சி ரோடு போக்குவரத்து நெரிசல் தீர இப்படியும் செய்யலாம்! இருபுறமும் ஒரு வழியாக்க ஆலோசனை

கோவை:கோவை - திருச்சி ரோட்டில், மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது; இருபுறங்களிலும், 'ஒன்-வே' திட்டத்தை செயல்படுத்தினால், ஓரளவுக்கு நெரிசலை கட்டுப்படுத்தலாம்.
கோவை மாநகரில் உக்கடம்-ஆத்துப்பாலம், திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் மூன்று ரோடுகளில் பாலம் வேலை நடப்பதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். தினமும் காலை, மாலை நேரங்களில், பல இடங்களில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன.திருச்சி ரோட்டில், அல்வேர்னியா பள்ளியில் இருந்து சுங்கம், ரெயின்போ வரை மேம்பால கட்டுமான பணி நடந்து வருகிறது.
ராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம், பஸ் டிப்போ, ஹைவேஸ் காலனி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, நுகர்வோர் அமைப்பினர் இணைந்து மாற்று யோசனையை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.அவை:* திருச்சி ரோட்டில், ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரை இருபுறமும் வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல், 'ஒன்-வே' ஏற்படுத்த வேண்டும். ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள், சுங்கம் ரவுண்டானா அருகே இடதுபுறம் திரும்பி, வாலாங்குளம் ரோட்டில் சென்று, 'கிளாசிக் டவர்' வழியாக ஜி.எச்., சிக்னல் அடைய வேண்டும்.
அதேபோல், அரசு மருத்துவமனையில் இருந்து சுங்கம் வரை, இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் செல்லாமல், 'ஒன்-வே' ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் இருந்து வரும் வாகனங்கள் ரெயின்போ, சுங்கம் அடைந்து நேராக கார்மல் கார்டன் பள்ளி ரோட்டில், புலியகுளம் சென்று, விநாயகர் கோவிலில் இருந்து வலதுபுறம் திரும்பி, பங்கஜா மில் ரோடு வழியாக ராமநாதபுரம் செல்ல வேண்டும்.இதன் மூலம், சுங்கம்-ராமநாதபுரம் மற்றும் சுங்கம்-அரசு மருத்துவமனை சிக்னல் இடையே 'ஒன்-வே'வாக இருக்கும்.
இரு புறங்களிலும், ஒரு வழியில் வாகனங்கள் செல்வதால் நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.நுகர்வோர் அமைப்பினர் கூறுகையில், 'திருச்சி ரோட்டில் குறிப்பிட்ட இரு இடங்களில், 'ஒன்-வே' செய்வதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் செல்ல முடியும். கார்மல் கார்டன் ரோடு மற்றும் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே ஆக்கிரமிப்பு அகற்றி, மாற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.'சுங்கம் சந்திப்பில் இருந்து, ரெயின்போ வழியாக டவுன் பஸ்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கலாம்.
'ஹைவேஸ் காலனி' உள்ளிட்ட இடங்களில் பயணிகள் இறங்கி கொள்ள முடியும். இத்திட்டத்தை, பரீட்சார்த்த முறையில், காலை மற்றும் மாலை நேரங்களில் அமல்படுத்தலாம். போலீசாருக்கும் வேலைப்பளு குறையும்' என்றனர்.திருச்சி ரோடு மாற்று வழிக்கான வரைப்படத்துடன், 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்' தலைவர் ஜெயராமன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணை நேற்று சந்தித்து, தங்களது ஆலோசனையை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X