பொது செய்தி

தமிழ்நாடு

தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019
Advertisement
 தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?


தற்கொலைக்கான சமூக காரணிகள் என்ன?
இயந்திரமான வாழ்க்கையில், வேகமான வளர்ச்சி பெற, உடல், மனதுக்கு அதிக பளு கொடுக்கின்றனர். முன்பு, திருமணத்திற்கு பின், சொந்த வீடு, வாகனம் வாங்கும் சூழல் இருந்தது. தற்போது, வீடு, வாகனம் வாங்கிய பின் தான், திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள், பலரிடம் இருக்கிறது. இதற்கான ஓட்டத்தில், தோல்வி ஏற்படும் போது, விபரீத முடிவு எடுக்கின்றனர். மது பழக்கம், வேலைப்பளுவும் தற்கொலையை துாண்டுகிறது.வேறு காரணிகள் உள்ளதா?குடும்ப உறுப்பினர்களுக்கு, மனநோய் பாதிப்பு, மது பழக்கம் இருந்தாலும், அவர்கள் வாரிசுகளுக்கு, தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது. மதுவுக்கு அடிமையாகி, அதை விட முடியாதவர்களும், தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கூட்டுக் குடும்பமாக இருந்த போது, பிரச்னை எற்பட்டால், பகிர்ந்து கொள்ள, ஆறுதல் கூற, ஆலோசனை சொல்ல, வழிகாட்ட, உறவினர்கள் இருந்தனர். தனிக்குடித்தனத்தில், இவையெல்லாம் இல்லாததால், மன அழுத்தம் அதிகரித்து, சிறிய பிரச்னைகளைக் கூட எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், தற்கொலை என்ற விபரீத முடிவை எடுக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து உள்ளதே?
சமீபத்தில் செய்யப்படட ஆய்வில், 18 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. இது, வருத்தம் அளிக்கிறது. மதிப்பெண் எடுப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தற்போதைய கல்வி முறை இருப்பதால், எப்படியும் நல்ல மதிப்பெண் பெற்றால் தான், எதிர்காலம் என, மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இந்த அழுத்தம் தாங்க முடியாமலும், மதிப்பெண்கள் குறைந்தால், எதிர்காலமே போய்விட்டது என்ற அச்சத்திலும், தற்கொலை முடிவு எடுக்கின்றனர். படிப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு துருப்பு தானே தவிர, அதுவே வாழ்க்கை கிடையாது.
தற்கொலை எண்ணத்தை எப்படி தடுப்பது?
தற்கொலை உட்பட எந்தவிதமான எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டாலும், உறவினர், நண்பர்களிடம் பிரச்னையை பேச தயங்கக் கூடாது. பெற்றோர், உறவினர், நண்பர் என, யாரிடம் தயங்காமல் நம்மால் பேச முடிகிறதோ, அவர்களிடம் முதலில் பேச வேண்டும்.பெற்றோரின் பங்கு இதில் முக்கியமானது. குழந்தைகள், எந்த நிலையிலும், தங்கள் பிரச்னைகளை மறைக்காமல், தயங்காமல் வந்து தங்களிடம் பேசும் அளவிற்கு, இணக்கமான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும்.இது, முதலுதவி சிகிச்சை போல் தான். அடுத்தக்கட்டம், மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண வேண்டும்.
இதற்கான சிகிச்சை வசதிகள் அரசு மையங்களில் உள்ளதா?அரசு சார்பில், தாலுகா அளவில் மனநல சிகிச்சை பிரிவு உள்ளது. சென்னையில், சைதாப்பேட்டை மருத்துவமனையில், மனநலம், தற்கொலை தடுப்பு சிகிச்சைக்கு, 10 படுக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆரம்ப நிலையில் அழைத்து வந்தால், தற்கொலையை தடுக்க முடியும்.
மனப் பிரச்னைகளை வெளியில் சொல்லத் தயங்குவது ஏன்?
தன்னை குறித்து, பிறர் அறிந்து விடுவர் என்ற எண்ணம் தான். இதுவும், ஒரு தாழ்வு மனப்பான்மை. இதை, ஒரு குறையாக நினைக்காமல், தன் பிரச்னைக்கு தீர்வு என நினைத்து, மனநல மருத்துவரை அணுக வேண்டும்.அதேபோல, உடல் நல பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாமல், தற்கொலை செய்பவர்களும் இருக்கின்றனர், இவர்கள், சிகிச்சைக்கு மருத்துவரை அணுகும்போதே, தற்கொலை எண்ணத்தையும் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும். தற்கொலை எண்ணமும், நோயின் வீரியத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தற்கொலை தடுப்புக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?இந்தியாவில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு, சென்னையில் தான் அதிகம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்
தற்கொலை தடுப்புக்கு அரசு திட்டங்கள்?
தமிழகத்தில், 24 மணி நேரம் செயல்படும், 104 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு, தற்கொலை எண்ணத்தை பேசி தீர்வு காணலாம். மாநகராட்சி, மண்டலங்களில் ஒரு மருத்துவமனை வீதம், மனநலப்பிரிவு துவங்கப்பட்டு உள்ளது. அதோடு, 'தொற்றா நோய்ப்பிரிவு' திட்டம் வாயிலாக, வீடுகளில் சென்று ஆய்வு செய்து, மனநலம், மது பாதிப்பை அறிந்து, அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கிறோம். அதேபோல், 'தாய்' திட்டம் வாயிலாக, தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெறுவோருக்கும், மனநல சிகிச்சை அளித்து, தற்கொலை எண்ணத்தை தடுக்கிறோம்.
மன அழுத்தம், தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி?
வாழ்க்கை முறையில் நிறைய மாற்றங்கள் தேவை. வரவு அறிந்து செலவு செய்ய வேண்டும். சக மனிதர்களை ஒப்பிட்டு பார்த்து வாழ்வதை, தவிர்க்க வேண்டும். பணி முடிந்தபின், அதை மறந்து, குடும்ப சூழலுக்குள் வர வேண்டும். பணி பிரச்னையை, வீட்டில் பேசுவதை தவிர்த்து, வேறு நபர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும். பெற்றோர், தங்கள் ஆசைகள், எண்ணங்களை, குழந்தைகளிடம் திணிக்க வேண்டாம். குழந்தைகளின் திறமை கண்டு, அதற்கு ஏற்ப ஊக்கப்படுத்தினால், அவர்கள் வாழ்க்கை மேம்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X