பொது செய்தி

தமிழ்நாடு

மனித உருவ சோலார் விளக்கு

Added : நவ 29, 2019
Advertisement
 மனித உருவ சோலார் விளக்கு

நெடுஞ்சாலைகளில் நடக்கும் பணியின் போது, இரவு நேர விபத்தை தடுக்கும் விதமாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், சோலாரில் இயங்கும், மனித உருவ விளக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், சாலை சீரமைப்பு, விரிவாக்கம், புது சாலை உருவாக்குதல்மற்றும் வடிகால் அமைத்தல், கால்வாய் சீரமைப்பு, விரிவாக்கம் போன்ற பணிகள் நடக்கின்றன.வாகன போக்குவரத்து அதிகமுள்ள பிரதான சாலைகளில், இப்பணிகள் இரவில் நடக்கும். இதுபோன்ற நேரங்களில், விபத்து நேரிடாத வகையில், எச்சரிக்கை விளக்குகளை எரிய விட்டு, வாகனங்களை சீராக செல்ல வைப்பது வழக்கம்.இதற்காக, சுழற்சி முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். இருந்தாலும், ஒரே இடத்தில் நிற்பது, விலகி நிற்பது, வாகன ஒளி பாதிப்பு, மோதுவது போல் வேகமாக வரும் வாகனங்களால், ஊழியர்கள் அச்சத்துடன் பணி புரியும் சூழல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, சோலாரில் செயல்படும் மனித உருவ எச்சரிக்கை விளக்கு அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., ரேடியல் உள்ளிட்ட சாலைகளில், இரவு நேரத்தில் தான், இடையூறு இல்லாமல் பணி நடத்த முடியும். அப்போது, ஊழியர்களை நியமித்து, வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.சில நேரங்களில், பணிக்கும் பாதிப்பு ஏற்படும்.
இதை தவிர்க்க, 70 ஆயிரம் ரூபாய் செலவில், சோலாரில் இயங்கும், மனித உருவ எச்சரிக்கை விளக்கு தயார் செய்து உள்ளோம். துாரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு, ஊழியர்நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்துவது போல் தெரியும். அதற்கு ஏற்ப, 6 அடி உயரத்தில், மனித உருவ பொம்மை தயாரித்துள்ளோம்.இதை, பணி நடக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டு செல்ல முடியும். ஓரிரு நாளில், சோதனை ஓட்டமாக பணி நடக்கும் இடத்தில் வைக்க உள்ளோம். இதனால், ஊழியர்கள் உழைப்பு விரயமாவது தடுக்கப்படும்; அவர்களுக்கு ஏற்பட்ட அச்சமும் விலகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X