கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உத்தரவை அமல்படுத்தாதது மாநகராட்சியின் இயலாமை: ஐகோர்ட்

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை:'மெரினா இணைப்பு சாலை மீன் வியாபாரிகள், தெரு வியாபாரிகள் விஷயத்தில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது, அதிகாரிகளின் இயலாமையை வெளிப்படுத்துகிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மீனவர்களின் பாதுகாப்பு, மீன்பிடி தடை காலத்தில், மீனவர்களுக்கு தரப்படும் நிதியை அதிகரிக்க கோருதல், மெரினா கடற்கரையை சுத்தம் செய்தல் ஆகியவை தொடர்பாக, மீனவர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மெரினா கடற்கரையை, மாநகராட்சி அதிகாரிகள், தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் ஏன் எடுத்து வர முடியவில்லை. மாநகராட்சியின், 15 மண்டலங்களில் உள்ள, தெரு வியாபாரிகளை கண்டறிந்து, உரிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். இதற்காக இறுதி வாய்ப்பு தரப்படுகிறது என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மெரினா இணைப்பு சாலையில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு, மாற்று இடம் கட்டப்பட உள்ளது. அவர்களை அகற்றும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரலாம்' என, சென்னை மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவையும், சட்டத்தையும் அமல்படுத்தும்போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும் என்று கூறுவது, கடமையை செய்ய முடியவில்லை என்பதை காட்டுகிறது. மெரினா இணைப்பு சாலை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருடன் இணைந்து, நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை.
தெரு வியாபாரிகளின் சட்டத்தையும் அமல்படுத்தவில்லை. இந்த விஷயங்களில், தன் கடமையை செய்ய முடியவில்லை என, சென்னை மாநகராட்சி கமிஷனர், தன் இயலாமையை அறிக்கையாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.இதையடுத்து, 'அடுத்த விசாரணையின் போது, மெரினா இணைப்பு சாலை மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துதல், தெரு வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பான அறிக்கையை, மாநகராட்சி தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு டிச., 19க்கு தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X