சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்பத்துார் கொலையில் பீஹாரில் இருவர் கைது

Added : நவ 29, 2019
Advertisement

அம்பத்துார்:அம்பத்துாரில், தொழிற்சாலை உரிமையாளர் கொலை வழக்கில், பீஹாரைச் சேர்ந்த தொழிலாளிகள் இருவர் கைதாகினர்.
வியாசர்பாடி, பெரியார் நகர், திருவள்ளுவர் தெருவில் வசித்தவர் பிரபாகரன், 27; அம்பத்துார், அத்திப்பட்டு அருகே, நடேசன் நகரில், இரும்பு குழாய்களுக்கு, வண்ணம் பூசும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.அவர், 22ம் தேதி இரவு, தொழிற்சாலையில், இரும்பு கம்பி மற்றும் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்ததில், இருவர், கையில் பைகளுடன், வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது.விசாரணையில், பீஹார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிஜேந்தர், 19, ரோஷன், 19, ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்ட இருவரும், பிரபாகரன் தொழிற்சாலையில், சில தினங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளனர். பணிக்கு சேர்ந்த நான்கு நாட்களில், 'எங்களுக்கு உடல்நிலை சரியில்லை; ஊருக்கு செல்கிறோம். வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை கொடுங்கள்' என, கேட்டுள்ளனர்.அதற்கு, பிரபாகரன், இப்போது என்னிடம் பணம் இல்லை எனக் கூறி உள்ளார். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும், அங்கிருந்த கட்டை மற்றும் இரும்பு கம்பியால், பிரபாகரனை அடித்துக் கொலை செய்துள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X