தமிழ்நாடு

பறிமுதல்!ரூ.1.56 கோடி தங்கம் ஏர்போர்ட்டில்...ஹாங்காக்கில் இருந்து கடத்தப்பட்டது

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019
Share
Advertisement
சென்னை:ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சீனாவின் கட்டுப் பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் இருந்து தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:40 மணிக்கு, ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த,
 பறிமுதல்!ரூ.1.56 கோடி தங்கம்  ஏர்போர்ட்டில்...ஹாங்காக்கில் இருந்து கடத்தப்பட்டது

சென்னை:ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீனாவின் கட்டுப் பாட்டில் உள்ள தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் இருந்து தங்க கட்டிகள் கடத்தப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:40 மணிக்கு, ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த, 'கேதே பசுபிக் ஏர்லைன்ஸ்' விமானத்தில் வந்த பயணியரை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், தென் கொரிய நாட்டின், சீயோல் நகரைச் சேர்ந்த, சாங் சிக் பேன், 36, என்பவரைச் சோதனையிட்ட போது, அவரது உடைமைகள், ஷூக்களில் இருந்து, 4 கிலோ தங்க கட்டிகள், 1.56 கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. அவரை கைது செய்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் பிட்னஸ் பயிற்சியாளராக பணிபுரிந்தது தெரிந்தது. மேலும், ஹாங்காங் விமான நிலையத்திற்கு, சாங் சிக் பேன் வந்த போது, சிலர், அவரிடம் பணம் கொடுத்து, சென்னை விமான நிலையம் வரும் மர்ம நபர்களிடம், தங்க கட்டிகளை கொடுக்குமாறு கூறியதும் தெரிய வந்தது. இது குறித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X