வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது

Added : நவ 29, 2019
 வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது

திருமுல்லைவாயல்:திருமுல்லைவாயலில், போலி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.அயப்பாக்கத்தில், போலீஸ் எனக்கூறி, ஒருவர் கடைகளில் வசூல் வேட்டை நடத்துவதாக புகார்கள் சென்றன.
இதனால், அயப்பாக்கத்தில் திருமுல்லைவாயல் போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 38, என்பவரது இரும்பு கடையில், ஒருவர் போலீஸ் எனக்கூறி, 1,000 ரூபாய் வாங்கியுள்ளார்.இது குறித்து, தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்றனர். அப்போது, அதே பகுதியில் உள்ள இன்னொரு பெட்டிக்கடையில், 100 ரூபாய் வசூலித்து, வெளியே வந்த அந்த நபரிடம், போலீசார் விசாரித்தனர்.இதில், அந்த நபர் அயப்பாக்கம், தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் என்ற ஜெயபிரகாஷ், 49, என்பதும், போலி போலீஸ் அடையாள அட்டை பயன்படுத்தி, வசூல் வேட்டை நடத்தியதும் தெரிய வந்தது.இதையடுத்து.அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X