சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறி திருடர்கள் மூவர் சிக்கினர்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (1)
Advertisement

எழும்பூர்: எழும்பூர் போலீசார், ஹால்ஸ் சாலையில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்று வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கையில், பட்டாளத்தைச் சேர்ந்த இம்தியாஸ், 23, அசைன், 18, இர்பான், 25, என்பதும், வழிப்பறி கொள்ளையர்களான மூவரும், வாலிபரிடம் வழிப்பறி செய்த மொபைல் போனை, யார் வைத்துக் கொள்வது என்பதில் ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் தெரிய வந்தது. நேற்று, மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவிலில் திருடியோருக்கு, 'காப்பு!'
பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த, சென்னீர்குப்பம், வெற்றிலை தோட்டம் பகுதியில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. சமீபத்தில், அம்மனின், 5 சவரன் நகை மற்றும் உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் திருடி சென்றனர். பூந்தமல்லி போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார், 21, பன்னீர்செல்வம், 20, ஆகியோர் சிக்கினர். நேற்று முன்தினம் இவர்களை கைது செய்த போலீசார், நகை மற்றும், 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவு குற்றவாளி அகப்பட்டான்
திருவல்லிக்கேணி: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ரபியுதீன், 26. பாரிமுனையில் உள்ள பணப்பரிமாற்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார். அக்., 17ம் தேதி, வாடிக்கையாளரிடம் கொடுப்பதற்காக, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சியுடன், அண்ணாசாலை வழியாக டூ - வீலரில் சென்றபோது, மூவர் கும்பல் வழிமறித்து, பணத்தை பறிக்க முயன்றது. ரபியுதீனின் அலறல் சத்தத்தை கேட்டு, அப்பகுதிமக்கள் வழிப்பறி திருடர்களான பாஸ்கரன், 37, ரமேஷ், 28, ஆகியோரை சுற்றிவளைத்து, திருவல்லிக்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக இருந்த வினோத், 37, என்பவர், நேற்று சிக்கினார்.
பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு
பழவந்தாங்கல்: நங்கநல்லுார், யூனியன் கார்பைட் காலனியைச் சேர்ந்தவர், விமலா, 38; அம்மா உணவக ஊழியர். நேற்று காலை வீட்டில் இருந்து உணவகத்திற்கு சென்றபோது, டூ - வீலரில் வந்த இருவர், விமலாவின், 2.5 சவரன் தாலிக் கொடியை பறித்து தப்பினர். பழவந்தாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி கண்ணாடி உடைப்பு
மாதவரம்: மாதவரம் அடுத்த சின்னமாத்துாரைச் சேர்ந்தவர், கருப்பசாமி. இவரது, 17 வயது மகன், நேற்று முன்தினம் இரவு, மஞ்சம்பாக்கம், 200 அடி சாலை, சுங்கச்சாவடி அருகே, டூ - வீலரில் சென்றார். அப்போது, லாரி ஒன்று, இவரது டூ - வீலர் மீது உரசியது. ஆத்திரமடைந்த சிறுவன், லாரி ஓட்டுனர் வெங்கடேசனை, 39, தாக்கியதோடு, கல் வீசி, லாரியின் கண்ணாடியை உடைத்தான். மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநங்கையருக்கு வலை
பாண்டிபஜார்: எழில் நகரைச் சேர்ந்தவர், நடேசன், 31. தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம், பாலாஜி அவென்யூ, முதல் தெருவில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கண்காணித்து வந்தார். அங்கு வந்த, மூன்று திருநங்கையர் அவரது பர்சை பறித்து தப்பினர். அதில், 5,000 ரூபாய் இருந்தது. பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.கடத்தல் வழக்கில் இருவர் கைதுஅயனாவரம்: படப்பை, கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பத்மினி, 66. சில தினங்களுக்கு முன், அவரது மருமகள் மேனகா, சொத்துக்காக அவரை காரில் கடத்திச் சென்று, அவரது அண்ணன் வீட்டில் அடைத்து வைத்திருந்தார். அயனாவரம் போலீசார் விசாரித்து, மேனகா, கருணாகரன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், ஜேம்ஸ், 34, குட்டி, 32, ஆகிய சகோதரர்களை, நேற்று கைது செய்தனர்.
பணம் பறித்தோருக்கு, 'கம்பி!'
புழல்: கொளத்துாரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனீப், 25; தன் நண்பர்கள் நால்வருடன் தங்கியிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லியில் இருந்து, கொளத்துாருக்கு, ஆட்டோவில் சென்றனர். அப்போது, ஆட்டோ ஓட்டுனருடன், மேலும் மூவர் இருந்தனர். புழல், விநாயகபுரம் அருகே சென்றபோது, வடமாநில தொழிலாளர்களை மிரட்டி, 8,200 ரூபாயை பறித்தனர். புழல் போலீசார் விசாரித்தனர். இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த அறிவரசன், 32, கொருக்குப்பேட்டை குப்புசாமி, 39, ஆகியோரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-நவ-201905:27:14 IST Report Abuse
Mani . V சார் அவுங்க போக்குவரத்து போலீஸ்காரங்களா இருக்கப் போறாங்க. நல்லா விசாரிங்க. இப்ப அவுங்கதான் இதுபோன்ற வழிப்பறிகளை அதிகம் செய்வதாக சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X