பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்மிக அரசியல் மாநாடு

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை:சென்னை, ராயப்பேட்டையில், ஆன்மிக அரசியல் மாநாடு, நாளை மறுநாள் நடக்கிறது.
மயிலாப்பூர், திருவள்ளுவர் கோவிலில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆன்மிக அரசியல் மாநாட்டு அழைப்பிதழை நேற்று வெளியிட்டார்.அப்போது அவர் அளித்த பேட்டி:ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., அரங்கில், நாளை மறுநாள் காலை, 6:00 மணிக்கு, திருக்கழுக்குன்றம் சதாசிவப்பிரம்மம் திருவாசக சித்தர் சிவ தாமோதரன் பங்கேற்கும், மாணிக்கவாசகர் அருளிய எட்டாம் திருமுறையான, திருவாசகம் முற்றோதல் பெருவிழா நடக்க உள்ளது.தொடர்ந்து, 11:00 மணியளவில், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து, காவிக்கொடி பேரணி நடைபெறும். மதியம், 2:00 மணிக்கு ஆன்மிக அரசியல் மாநாடு நடைபெற உள்ளது.
இதில், ஆதீனங்கள், மடாதிபதிகள், சிவனடியார்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில், திராவிட அரசியலுக்கு மாற்றாக, தேசியம் கலந்த ஆன்மிக அரசியல், தமிழகத்தில் வர வேண்டும்; மதுவிலக்கு, லஞ்ச ஊழல் ஒழிப்பு, நீர் மேலாண்மை, வளர்ச்சி அரசியல், மற்றும் தலைமை செயலகம் அமைந்துள்ள, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெயரை, 'வள்ளுவன்கோட்டை' என, பெயர் மாற்றம் செய்வது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.மாலை, 5:00 மணிக்கு, மயிலை மாங்கொல்லையில், பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X