கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - எம்.எல்.ஏ., மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்

Added : நவ 29, 2019
Advertisement
 தி.மு.க., - எம்.எல்.ஏ., மனைவியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை:நில அபகரிப்பு வழக்கு விசாரணைக்காக, தி.மு.க., - எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன், மனைவியுடன் நேற்று, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன். இவர், கிண்டி தொழிலாளர் காலனியில் உள்ள, கண்ணன் என்பவருக்கு ஒதுக்கிய, 'சிட்கோ' நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக, தன் மனைவி காஞ்சனா பெயரில் அபகரித்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து, பார்த்திபன் என்பவர், கிண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார், இருவர் மீதும், ஜூன் 3ல் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கியது.ஜூலை 24ல், இருவரும், எழும்பூர், சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகினர். போலீசார், இருவரிடமும் வாக்குமூலம் பெற்றனர். பின், சைதாப்பேட்டை, 11வது நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர், மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன் ↓ஆஜராகினர்.வழக்கு விசாரணையை, டிச., 12க்கு மாற்றி, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X