கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.,வுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம்

Added : நவ 29, 2019
Advertisement

சென்னை:சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில், சட்ட விரோத கட்டட வழக்குகளில், சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.,வுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதியில், சட்ட விரோதமாக, சினிமா பிரபலங்கள் உட்பட, 138 பேர் பங்களாக்கள் உள்ளிட்ட, பல்வேறு கட்டடங்களை கட்டி உள்ளனர். இவர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் பெற, சென்னை மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடற்கரைக்கு மிக அருகில், மிகப்பெரிய கட்டடங்களை கட்ட, அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். அந்த கட்டடங்களுக்கு, மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அதில், கடல் அலைகள், கட்டடங்களுக்குள் வருவதை தடுக்க, சட்ட விரோதமாக பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். 'இதுபோன்ற தடுப்புக்களை எதிர் காலத்தில் அமைக்க மாட்டேன்' என, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.அந்த கட்டடத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
இந்த வழக்கில், ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த உத்தரவுகளை, அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.அரசு உயர் அதிகாரிகள், தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் ஒழுங்காக செய்யாமல், சட்டவிரோத கட்டடங்களை கட்ட, உடந்தையாக உள்ளனர். எனவே, சென்னை மாநகராட்சி கமிஷனர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வதிக்கப்படுகிறது.அடுத்த முறை வழக்கு விசாரணையின் போது, நகராட்சி நிர்வாகத் துறை முதன்மை செயலர், வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆஜராக வேண்டும். வழக்கு விசாரணை, டிச., 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X