செஞ்சி:பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, செஞ்சி ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சி ஊராட்சியில், 300 ஏக்கர் பரப்பில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான செஞ்சி ஏரி உள்ளது.இந்த ஏரியை நம்பி, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், 700 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த ஏரியை முறையாக துார் வாரி சீரமைக்காததால், செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.மேலும், ஏரியை சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருகின்றனர். ஏரியில் உள்ள மதகு சேதமடைந்து உள்ளது. இதனால், ஏரியில் மழை நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும், சேதமடைந்த மதகு பகுதியில் குடிமகன்கள் மது அருந்தும் இடமாக மாற்றி விட்டனர்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளங்களை சீரமைத்து வரும் நிலையில், செஞ்சி ஏரியையும் துார் வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.