பொது செய்தி

தமிழ்நாடு

தீருமா?பழவேற்காடு இருளர் மக்களின் இன்னல்...நொறுங்கி விழும் வீடுகளால் தினம் தினம் அச்சம்....புதிய வீடுகள் கட்ட வசதியின்றி தவிப்பு

Added : நவ 29, 2019
Advertisement
 தீருமா?பழவேற்காடு இருளர் மக்களின் இன்னல்...நொறுங்கி விழும் வீடுகளால் தினம் தினம் அச்சம்....புதிய வீடுகள் கட்ட வசதியின்றி தவிப்பு

பழவேற்காடு:பழவேற்காட்டில் இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகளால், அசம்பாவிதங்களை எண்ணி, இருளர் மக்கள் அச்சத்துடன் வசித்து வருவதுடன், புதிய வீடுகளை கட்டுவதற்கு, வசதியின்றி தவித்து வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றியம், பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ராஜரத்தினம் நகரில், 60க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன.பழவேற்காடு ஏரியில், சிறிய வலைகளை கொண்டும், துாண்டில் உதவியுடனும், மீன்பிடித்து அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு, அன்றாட வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.வறுமைஇவர்களுக்கு, 30 ஆண்டுகளுக்கு முன், அரசு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன. அவை, தற்போது முற்றிலும் சேதம் அடைந்து கிடக்கின்றன. வீடுகளில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் காரைகள் பெயர்ந்து கிடக்கின்றன.மழை பெய்தால், வீடு முழுதும் ஒழுகுவதால் மிகுந்த தவிப்பிற்கு ஆளாகின்றனர்.
கடந்த மாதம் பெய்த மழையின்போதே, செஞ்சி லட்சுமி என்பவரது வீட்டின் கூரை இடிந்து உள்ளே விழுந்தது.அச்சமயம் செஞ்சிலட்சுமி குடும்பத்தினர் வெளியில் இருந்ததால், உயிர் பிழைத்தனர். இடிந்த இடிபாடுகளைகூட அகற்ற முடியாத நிலையில், வறுமையில் அவர்களது குடும்பம் உள்ளது.அரசு அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை எனவும், அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். மற்ற வீடுகளும், விழுவதற்கு தயார் நிலையில் உள்ளன.சேதம் அடைந்து கிடக்கும் மேற்கண்ட தொகுப்பு வீடுகளில் வசிக்கும் இருளர் மக்கள் அசம்பாவிதங்களை எண்ணி தினம் தினம் அச்சத்துடன் வசிக்கின்றனர்
.பணம் இல்லை
அச்சம் காரணமாக பெரும்பாலான நேரங்களை வீட்டின் வெளிப்பகுதியிலேயே இருக்கின்றனர். ஒரு சிலர், சிறு குடில்களை அமைத்து கொண்டு, மழை நேரங்களில் அதில் வசிக்கின்றனர்.மீன்பிடி தொழில் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் குடும்ப செலவினங்களுக்கே போதாத நிலையில், புதியதாக வீடுகளை கட்ட பணம் இன்றி தவித்து வருகின்றனர்.இருளர் மக்களின் இன்னல் தீரும் வகையில், புதிய குடியிருப்புகளை அரசு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.வீடுகள் சேதம் அடைந்து விழுந்து வருவதால், வசிப்பதற்கே அச்சமாக உள்ளது. தினமும், கணவன், மனைவி இருவரும் மீன்பிடி தொழிலுக்கு சென்றால் தான், 200 - 250 ரூபாய் வரை கிடைக்கும். இந்த பணம் குடும்ப செலவுகளுக்கே போதுமான இல்லை. மழைக் காலங்களில் தொழிலுக்கும் செல்ல முடியாது. ஒரு சில நாட்கள் உணவு இல்லாமல்கூட இருக்கிறோம். இந்த நிலையில், புதிய வீடுகளை எப்படி அமைக்க முடியும். அரசு உதவினால் மட்டுமே எங்களுக்கு வசிக்க பாதுகாப்பான இடம் கிடைக்கும்.-கே.வள்ளிப்பன், ராஜரத்தினம் நகர் இருளர் பகுதி, பழவேற்காடு.
சம்பந்தப்பட்ட பகுதியினை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், பட்டா நிலமாக இருந்தால், மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம், வீடு கட்டுவதற்கும், அவர்கள் அச்சமின்றி வசிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.-ஒன்றிய அதிகாரி, மீஞ்சூர் ஒன்றியம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X