பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் புதிய அகல ரயில் பாதை நில எடுப்புக்கு ரூ.48 கோடி தேவை

Added : நவ 29, 2019
Advertisement

திருத்தணி:திண்டிவனம்- - நகரி புதிய அகல ரயில் பாதை திட்ட பணிகளுக்கு, நிலம் கையகப்படுத்த, 48.09 கோடி ரூபாய் தேவை என, தனி தாசில்தார், ரயில்வே துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திண்டிவனம்- - நகரி வரையிலான புதிய அகல ரயில் பாதை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகா வழியாக செல்கிறது.இப்பாதை அமைக்க, பள்ளிப்பட்டு தாலுகாவில், 11 கிராமங்கள்; ஆர்.கே.பேட்டை தாலுகாவில், ஐந்து என, மொத்தம், 16 கிராமங்களில், 429 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.நிலம் எடுக்க, தனி தாசில்தார் தலைமையில், எட்டு ஊழியர்கள் உடைய அலுவலகம், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.இத்திட்டம் குறித்து, திண்டிவனம்- - நகரி புதிய ரயில் பாதை திட்ட தனி தாசில்தார் பாலாஜி கூறியதாவது:திண்டிவனம் - -நகரி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகாவில், அரசு நிலம், 68.70 ஏக்கரும், விவசாயிகளின் நிலம், 360.30 ஏக்கரும் என மொத்தம், 429 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன.நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகையாக, 48.9 கோடி ரூபாய், தற்காலிக மதிப்பீடு தொகையாக தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகை வழங்க வேண்டும் என, சென்னை, தாம்பரம் தென்னக ரயில்வே முதன்மை செயற்பொறியாளர் - கட்டடம் - மற்றும் திருவள்ளூர் மாவட்டநிர்வாகத்திற்கு, கடந்த, 6ம் தேதி பரிந்துரை கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம். நிதியுதவிக்காக தற்போது காத்திருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X