பொது செய்தி

தமிழ்நாடு

தரம் பிரிக்காத குப்பை கொடுத்தால் அபராதம்

Added : நவ 29, 2019
Advertisement
 தரம் பிரிக்காத குப்பை கொடுத்தால் அபராதம்

திருத்தணி:''குப்பை கழிவுகளை தரம் பிரித்து தராதவர்களுக்கு, அபராதம் விதிக்கப்படும்,'' என, திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் ஊழியர்கள், ராதாகிருஷ்ணன் தெருவில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.அப்போது, பொதுமக்கள், குப்பையை தரம்பிரிக்காமல், துப்புரவாளர்களிடம் தருவதை பார்த்த ஆணையர், ''இனிவரும்நாட்களில், மக்கும்,மக்காத குப்பையை பிரித்து கொடுக்காவிட்டால், வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.
ஆணையர் கா.ராஜலட்சுமி கூறியதாவது:நகராட்சியின், 21 வார்டுகளில், தற்போது, ஒன்பது வார்டுகளில், ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள், தள்ளுவண்டியுடன் சென்று குப்பை சேகரிக்கின்றனர்.பெரும்பாலான வீடுகளில், குப்பையை, தரம் பிரித்து கொடுப்பதில்லை. இதனால், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.இதனால், அடுத்த மாதம் முதல், குப்பையை தரம் பிரித்து கொடுக்காதோர், தெருவில் குப்பை போடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X