பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

Added : நவ 29, 2019
Share
Advertisement
திருவள்ளூர்:வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை, மாவட்ட பார்வையாளர், நேரில் ஆய்வு செய்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் சரி பார்ப்பு பணி, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை, திருவள்ளுர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், 'எல்காட்'

திருவள்ளூர்:வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை, மாவட்ட பார்வையாளர், நேரில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்காளர் சரி பார்ப்பு பணி, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகளை, திருவள்ளுர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், 'எல்காட்' மேலாண்மை இயக்குனருமான, விஜயகுமார், நேற்று, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பார்வையிட்டார்
.அவரிடம், கலெக்டர் மகேஸ்வரி கூறுகையில், ''இம்மாவட்டத்தில், இதுவரை மொத்தம் உள்ள, 33.04 லட்சம் வாக்காளர்களில், 33.03 வாக்காளர் விபரங்கள், சம்பந்தப் பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு உள்ளது. ''மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,'' என்றார்.சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை மேலும் துரிதப்படுத்தி, துாய்மைப்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தயார் செய்திடுமாறு, மாவட்ட பார்வையாளர் விஜயகுமார், அறிவுறுத்தினார்.உடன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் - தேர்தல் - புனிதா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X