பொது செய்தி

தமிழ்நாடு

'பசுமை வானம் வசப்படும்!'

Added : நவ 29, 2019
Advertisement
 'பசுமை வானம் வசப்படும்!'

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் -5ல் நேற்று, குன்னத்துார் அருகே, நான்கு ஏக்கரில், 1,850 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், தமிழகத்துக்கே முன்னோடி திட்டமாக மாறியுள்ளது. இக்குழுவின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு, பல்வேறு அமைப்புகள் உருவாகி, பசுமை சேவையாற்றி வருகின்றன. பல இடங்களிலும், மரக்கன்று வளர்ப்பு இயக்கம், எட்டு திசையிலும் பரவியது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், நான்கு கட்டமாக, 6.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டன. ஐந்தாவது திட்டத்தில், 1.50 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன், வெற்றிப்பயணம் மீண்டும் துவங்கியது. நேற்று வரை, 1.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.ஐந்தாவது திட்டத்தின், 35வது நிகழ்ச்சி, குன்னத்துாரில் நேற்று நடந்தது. வாவகரைப்புதுார், கெட்டிசெவியூரில் உள்ள, பெத்தான் தோட்டத்தில், நேற்று, மரக்கன்றுகள் நடப்பட்டன. உரிமையாளர் நாகமாணிக்கம் குடும்பத்தினர், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் இணைந்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.மொத்தம், நான்கு ஏக்கரில், 1,850 மலைவேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. இத்திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90474 36666 என்ற எண்ணில, கள அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X