பொது செய்தி

தமிழ்நாடு

உதவி இயக்குனர்கள் கூண்டோடு இடமாற்றம்! ஊரக வளர்ச்சித்துறையில் அதிரடி

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் 106 பேர், அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால், ஊரக வளர்ச்சித்துறையில் அதற்கான ஆயத்த பணி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வசதியாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இச்சூழலில், தமிழக அளவில், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நிலை அலுவலர்கள் (அரசாணை எண்:524), 106 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 36 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனராக (அரசாணை எண்:525) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குனர்கள், மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் என, 106 பேர், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்யப்பட்ட அலுவலர்கள், பதில்நபரை எதிர்பார்க்காமல், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணியில் உடனே சேர, கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டுமென, கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X