சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

Added : நவ 29, 2019
Advertisement

திருத்தணி: திருத்தணி நகராட்சியில், காய்கறி மற்றும் பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று, திருத்தணி நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில், நகராட்சி ஊழியர்கள் மேற்கண்ட கடைகளில், ஆய்வு நடத்தினர்.அங்கு, தடைசெய்யப் பட்ட பிளாஸ்டிக் கவர், 50 கிலோ பறிமுதல் செய்தனர். மேலும், ஒரு கடைக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜை
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, காலை, 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது.மதியம் மற்றும் மாலையில் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திருத்தணி: திருத்தணி, அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், திருத்தணி கல்வி மாவட்ட அலுவலவர் முனிசுப்ராயன் உத்தரவின் பேரில், நேற்று, மாணவர்களுக்கு தேர்தல் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சம்பத்குமார் தலைமை வகித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில், ஆசிரியர்கள் மோகன் யோகேஸ்வரன் ஆகியோர் மாணவர்களுக்கு தேர்தல் எவ்வாறு நடத்துவது, எதற்காக தேர்தல் நடத்த வேண்டும், தேர்தல் விதிமுறைகள் உட்பட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.இதில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X