பொது செய்தி

தமிழ்நாடு

கண்வலி விதைக்கு 'மவுசு' அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : நவ 29, 2019
Advertisement

வெள்ளகோவில்:கண்வலி விதைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மூலனுார், தாராபுரம், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏறத்தாழ 7 ஆயிரம் ஏக்கரில் செங்காந்தள் மலர் என்னும் கண்வலி விதை செடி நடவு செய்யப்பட்டு, பிப்., முதல் ஏப்ரல் வரை அறுவடை செய்ய தயாராகி வருகிறது. வருடந்தோறும் 15 முதல் 20 சதவீத உற்பத்தி தேவை அதிகரித்து வருகிறது.விவசாயிக்கு ஒரு ஏக்கர் பயிரிட, முதலாமாண்டு கண்வலிக்கிழங்கு விதைக்க, சொட்டு நீர் பாசனம், கம்பிவேலி பந்தல் அமைக்க, என ஏக்கருக்கு 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இரண்டாம் ஆண்டு முதல் தலா இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும். விவசாயிக்கு ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றால் மட்டுமே விலை கட்டுப்படியாகும், குறைவாக விற்றால் நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.தமிழ்நாடு கண்வலி விதை விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ரகுபதி கூறியதாவது:இந்தியாவில் தற்போது, 45 நிறுவனங்கள் மருத்துவ பயன்பாடு மற்றும் அழகுசாதன பொருள் தயாரிக்க கண்வலி விதைகளை வாங்கி அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். புதிதாக இந்த ஆண்டு சீனா விதைகளை வாங்குவதற்கு தயாராக வர்த்தகத்தில் உள்ளே நுழைந்துள்ளது.தற்போது 'மேக்' நிறுவனம் இந்த ஆண்டு கிலோ 2 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்து வாங்கி வருகின்றனர். அடுத்த ஆண்டு இதே நிறுவனம் 2 ஆயிரத்து 500 என விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்து வாங்குவதாக உறுதி அளித்துள்ளது.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X