பொது செய்தி

இந்தியா

கோத்தபயா இன்று மோடியுடன் சந்திப்பு

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக, அண்டை நாடான இலங்கையின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே, டில்லிக்கு நேற்று வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்.இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, கோத்தபயா ராஜபக்சே அதிபரானார். அதைத் தொடர்ந்து, அவருடைய அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜ்பக்சே, பிரதமராக பதவியேற்றார்.தேர்தலில் வென்றதும்,
கோத்தபயா  இன்று மோடியுடன் சந்திப்பு

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக, அண்டை நாடான இலங்கையின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே, டில்லிக்கு நேற்று வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்.இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, கோத்தபயா ராஜபக்சே அதிபரானார். அதைத் தொடர்ந்து, அவருடைய அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜ்பக்சே, பிரதமராக பதவியேற்றார்.


latest tamil news


தேர்தலில் வென்றதும், கோத்தபயாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று, மோடியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார்; இந்தியாவுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.அதையேற்று, கோத்த பயா நேற்று டில்லிக்கு வந்தார். அதிபரான பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.பிரதமர் மோடியை, அவர் இன்று சந்தித்து பேசுகிறார். இலங்கையில் உள்ள தமிழர் நலன், மீனவர் பிரச்னை உட்பட பல முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த, சீனா முயன்று வருகிறது. இதற்காக, இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியா, இலங்கை இணைந்து செயலாற்றுவது தொடர்பாக பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


வைகோ ஆர்ப்பாட்டம்



இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.''மோடி அரசு, இலங்கையுடன் நட்பு பாராட்டுகிறது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்ற, போர்க் குற்றவாளி கோத்தபயா. அவருடனான நெருக்கம், இலங்கையில் உள்ள தமிழர்களை அச்சமடைய செய்துள்ளது,'' என, வைகோ கூறினார்.போராட்டத்தில் ஈடுபட்ட, நான்கு பெண்கள் உள்பட, 125 பேர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் சில மணி நேரம் வைக்கப்பட்டனர்; பின், விடுவிக்கப்பட்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
29-நவ-201911:34:30 IST Report Abuse
HSR அன்புள்ள மோடிஜி நீங்கள் ஒருவர்தான் தமிழர்களுக்கு ஒரே நம்பிக்கை,, இங்கே ஈழத்தமிழர்களை வைத்து ஒருவன் வோட்டு பிச்சை எடுக்கிறான், இன்னொருவனோ தமிழர் தலைவன் என்று கூறிக்கொண்டு இத்தாலி கொலைகார கொள்ளைக்கார கும்பலுடன் சேர்ந்து ஊழல் வழக்கில் விடுவிக்க தமிழர்களையே கொன்று குவித்து பதவி சுகம் காண்கிறான். ஆதாயம் இல்லாமல் யாரும் உதவிட இல்லாத இலங்கைத்தமிழர்கள் கேட்பாரில்லாத அனாதைகளாய் உள்ளார்கள்.. தமிழக அரசியல் கட்சிகள் பணம் இல்லையனெறால் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல மோடிஜி. தயவு கூர்ந்து அங்கிருக்கும் தமிழ் சகோதரர்களை உங்களுக்கு இங்கே வோட்டு போட மாட்டார்கள் என்று தெரிந்தே உதவிட உங்களைத்தவிர யார் உள்ளார்கள் என்பதை மனதில் கொண்டு அவர்கள் நல்வாழ்வு வாழ அனைத்து உதவிகளையும் செய்து அவர்களின் தார்மிக உரிமைகளுக்கு பங்கம் வராவண்ணம் பாதுகாப்பு அளித்து உதவிட வேண்டுமென்று வேண்டி விரும்பிக்கேட்டு கொள்கிறேன் பிரதமர் அவர்களே..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
29-நவ-201911:29:58 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     இவர்கள் சந்தோசமா சந்தித்தால் சொம்புகளும் சந்தோசப்படும் அவ்வளவு பாசம் காவிகளுக்கு
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
29-நவ-201909:21:39 IST Report Abuse
Krishnan G \\இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்ற, போர்க் குற்றவாளி கோத்தபயா. அவருடனான நெருக்கம், இலங்கையில் உள்ள தமிழர்களை அச்சமடைய செய்துள்ளது,'' என, வைகோ கூறினார்\\ வைகோ அவர்களே சில காலம் முன்னர் நீங்கள் காங்கிரஸ் மற்றும் தமிழின துரோகி என்று உங்களால் பாசமாக அழைக்கப்பட்ட உங்கள் அண்ணன் தலைவர் பற்றியும் என்னவெல்லாம் கூறி கூவி கூவி தேர்தலில் பரப்புரை செய்தீர்கள் என்று மறந்துவிட்டீர்களா.. உண்ணும் உணவில் உப்பிட்டு உண்பவரானால், தயவுசெய்து இனிமேல் நீங்கள் இலங்கை தமிழர் நலன் பற்றி தங்களின் திருவாய் மலறாதீர்.. மானம் கேட்டவர் நீங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X