சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் :உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தகவல்

Added : நவ 29, 2019
Advertisement
 ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் :உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தகவல்

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே, கூவம் ஆற்றின் குறுக்கே பாலம், பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, ஒன்றிய அலுவலகத்தை தண்டலம் மக்கள் முற்றுகையிட்டனர். மேலும், வரும் உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாகவும், தண்டலம் மக்கள் கூறினர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது, தண்டலம் ஊராட்சி. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் போதிய பஸ் வசதி, மின் வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி மற்றும் கூவம் ஆற்றைக் கடந்து செல்ல பாலம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து, பொதுமக்கள், கடந்த மாதம், 17ம் தேதி அடிப்படை வசதிகள் கேட்டு, தண்டலம் கிராமத்தில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னும், ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை, 75 பெண்கள் உட்பட, 150க்கும் மேற்ப்டட மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு, ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், தங்களது கோரிக்கைகளை இனிமேலும் நிறைவேற்றாவிட்டால், வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவும், தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றை அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, குலசேகரன் மற்றும் கடம்பத்துார் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து நடந்த பேச்சில், அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X