பொது செய்தி

தமிழ்நாடு

செயல்திட்டம் சமர்ப்பித்தலில் அரசு பள்ளி மாணவியர் 'டாப்'

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:செயல்திட்டம் சமர்ப்பிக்கும் போட்டியில், ஒண்டிப்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மூன்று பாடங்களில் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.புதிய பாடத்திட்டத்தின் தன்மையை, மாணவர்கள் புரிந்து கொள்வதோடு, ஆய்வுத்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், 'ஸ்கோப்' (Specific concept oriented programe) திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட, ஏழு பாடங்களில், குறிப்பிட்ட தலைப்பில் மாணவர்கள் ஆய்வு செய்து, கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த ஆய்வுக்கு பரிசு வழங்கப்படும்.செயல்திட்டம் சமர்பிக்கும் போட்டி, ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய, மூன்று பாடங்களிலும், ஒண்டிப்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதல் பரிசு பெற்றனர். தாவரவியல், விலங்கியல் பாடங்களில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், பொருளாதார பாடத்துக்கு, ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, வணிகவியல் பாடத்தில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். இவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பரிசு வழங்கி, பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X