பொது செய்தி

தமிழ்நாடு

வினாடி வினா; வெல்லப்போவது யார்? காலிறுதியில் மாணவர்கள் உற்சாகம்

Added : நவ 29, 2019
Advertisement
 வினாடி வினா; வெல்லப்போவது யார்? காலிறுதியில் மாணவர்கள் உற்சாகம்

கோவை:'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, பட்டம் இதழ் சார்பில், மெகா வினாடி வினா போட்டியின் காலிறுதி சுற்றில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.'தினமலர்' நாளிதழ், கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா போட்டி, நேற்று பள்ளபாளையத்தில் உள்ள விவேகானந்த கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 250 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் முன்னிலையில், காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'ஏ' அணியை சேர்ந்த யோகேஸ்வரி, பரத் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் வினாடி வினாவில் பங்கேற்றோருக்கு, பள்ளி முதல்வர் வனிதாமணி பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் மேத்யூ, இந்திரஸ்ரீ, நலந்திருயாழினி, தீபா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X