பொது செய்தி

தமிழ்நாடு

மலைக்கோவில் தேவஸ்தானம் சார்பில் பஸ்கள் இயக்கம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
திருத்தணி:திருத்தணி மலைக்கோவிலுக்கு, தேவஸ்தானம் சார்பில், பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் நிலையம் அருகே, தணிகை இல்லத்தில் இருந்து, நேற்று மாலை, மலைக்கோவிலுக்கு புறப்பட்ட பஸ், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த முருக பக்தர் ஒருவர், பஸ்சில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்து,

திருத்தணி:திருத்தணி மலைக்கோவிலுக்கு, தேவஸ்தானம் சார்பில், பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பஸ் நிலையம் அருகே, தணிகை இல்லத்தில் இருந்து, நேற்று மாலை, மலைக்கோவிலுக்கு புறப்பட்ட பஸ், மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.பஸ்சில், 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்து கொண்டிருந்த முருக பக்தர் ஒருவர், பஸ்சில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்து, ஓட்டுனருக்கு சைகை மூலம் உணர்த்தினார்.உடனடியாக பஸ்சை நிறுத்திய ஓட்டுனர், பஸ்சின் பேட்டரி பகுதியில் இருந்து புகை வெளியேறுவதை கண்டறிந்தார்.பஸ்சில் இருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின், சம்பவ இடத்திற்கு வந்த மெக்கானிக் குழு, தீயை அணைத்து, பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X