பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் நகராட்சி சந்தைக்கு செல்ல முக கவசம் முக்கியம்!

Added : நவ 29, 2019
Advertisement
  மழைக்காலத்தில் நகராட்சி சந்தைக்கு செல்ல முக கவசம் முக்கியம்!

உடுமலை:உடுமலை நகராட்சி சந்தை வளாகத்தில் குவியும் கழிவுகள் மற்றும் உரக்குடில் காரணமாக துர்நாற்றம், நோய்த்தொற்று ஏற்படுகிறது. விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலை நகராட்சி சந்தை வளாகம், 16.14 ஏக்கரில் அமைந்துள்ளது. 34 கமிஷன் கடைகள் மற்றும் 314 நிரந்தர கடைகள் உள்ளன.தக்காளி, தேங்காய், வெங்காயம், முருங்கை, கத்தரி, வெண்டை என தினமும், 150 முதல் 700 டன் வரை காய்கறிகள் வரத்து வருகிறது. சரக்கு ஆட்டோ, சரக்கு வேன், லாரி என, 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம், விளைபொருட்கள் வருகிறது.கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் பகுதிகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.திங்கட்கிழமைகளில் சந்தை கூடும் போது, ஆயிரக்கணக்கான கடைகள் அமைக்கப்படுகிறது. ஏறத்தாழ, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என, ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில், மாட்டுச்சந்தையும், நாட்டு கோழி சந்தையும், திங்கட்கிழமை அதிகாலை, ஆட்டுச்சந்தையும் நடக்கிறது. கால்நடை சந்தைக்கு ஏராளமான மாடு, ஆடுகளும், வியாபாரிகளும் வருகின்றனர். ஆனால், சந்தையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்பது வேதனையானது. வளாகத்திலுள்ள ரோடு முழுவதும் குண்டும், குழியுமாக, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மழை காலங்களில், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கழிவுகள் அகற்றப்படாமல், மலைபோல் தேங்குகின்றன. இரவு நேரங்களில் மின் விளக்கு வசதி, குடிநீர், கழிப்பிடம், மழை நீர் வடிகால் என, எந்த வசதிகளும் இல்லை.ஆடு, மாடுகள், கோழி விற்பனை சந்தைகள் இயங்கி வந்த வழித்தடங்கள், நகராட்சியால் இறைச்சி கடைகள், ஆடு வதைக்கூடம் என, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.தற்போது, நுண் உரக்கிடங்கு கட்டப்பட்டதால், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை, அரைத்து உரமாக மாற்றும் வகையில், நகராட்சி சந்தை வளாகம் மற்றும் மாட்டுத்தொழுவம் பகுதியில், நுண் உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.தினமும், 4 டன் கழிவுகள் அரைக்கும் திறன் கொண்ட இக் குடில்களில் கழிவுகள் தேங்குகின்றன. உரக்கிடங்கிற்கு கொண்டு வரும் கழிவுகள், உலர வைக்கும் கான்கிரீட் தளம் இல்லாததால், வளாகத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம், தொற்று நோய்கள் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். துர்நாற்றத்தால், முக கவசம் அணிந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதோடு நகராட்சி சந்தையை ஒட்டி, மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.அதே போல், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உடற்பயிற்சிக்கு செல்லும் நேதாஜி விளையாட்டு மைதானம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X