பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் குழந்தைகள் தினம்கூடுதல் நிதிக்கு வலியுறுத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, பகல் நேர பாதுகாப்பு மைய குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்த வேண்டுமென அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் தினம், டிச., 3ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, அந்தந்த வட்டாரங்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. உடுமலை, மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களில் பகல் நேர பாதுகாப்பு மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும், 20 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் தினத்தில், இந்த குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்தவும், அவர்களுக்கான தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும், போட்டி மற்றும் இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என உத்தரவில் உள்ளது. இதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் நடப்பதாக, ஆசிரியர் பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.கூடுதல் நிதி கிடைக்குமா?ஆண்டுதோறும், இத்தினத்தில், சிறிய கலைநிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடுவதற்கென கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இந்த தினத்தில், நிகழ்ச்சியின்போது உணவு, சிற்றுண்டி மற்றும் வழங்கப்படும் பரிசுக்கென குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயம்செய்து வழங்குகிறது. ஆசிரியர் பயிற்றுனர்களும், தொகை செலவிடு கின்றனர். எனவே, கூடுதலான உணவு வழங்கவும், அரசு நிகழ்ச்சியை விமர்சையாக கொண்டாடவும் வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டுமென கல்வியாளர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X