பொது செய்தி

தமிழ்நாடு

கலர்... கலராய் தயாராகுது ஓட்டு சீட்டு: உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறு

Added : நவ 29, 2019
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு. ஓட்டுச்சீட்டுகள் தயார்படுத்தும் பணிகள் நடக்கிறது.உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி மட்டுமே அறிவிக்கப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கான பணிகள் முழுவதும், அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களிலும் தீவிரமாக நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில், கோவையில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள், பொருட்கள் பயன்பாடு, ஓட்டுச்சீட்டுகள், ஓட்டுச்சாவடி மையங்களை கையாளும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இதையடுத்து, வார்டு உறுப்பினர், மற்றும் ஊராட்சி தலைவருக்கான தேர்தலுக்கு, கட்சி இல்லாமல், அந்தந்த வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னங்கள்தான் வழங்கப்படுகிறது.இவ்வாறு, 25 சின்னங்கள் அச்சடிக்கப்பட்ட, வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவருக்கான ஓட்டுச்சீட்டுகள் திருப்பூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.வார்டு உறுப்பினருக்கு, நீலம் மற்றும் சந்தன நிறங்களிலும், ஊராட்சி தலைவருக்கு 'ரோஸ்' நிறத்திலும் ஓட்டுச்சீட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அந்தந்த வட்டாரங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அவர்களுக்கான ஓட்டுசாவடி அமைந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் பணிகளையும் துவங்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தல், அறிவிப்புக்கு முன்பே, பணிகளை 90 சதவீதம் நிறைவு செய்து, தேர்தலுக்கு தயாராக இருப்பதற்கு, உள்ளாட்சி நிர்வாக அலுவலர்கள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X