மாணவர்களுக்கு

Added : நவ 29, 2019
Share
Advertisement
கூடலுார்:கூடலுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், வேலைவாய்ப்பு துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.உதவி தலைமையாசிரியர் சங்கர் வரவேற்றார்.முகாமுக்கு, பள்ளி தலைமையாசிரியர் அய்யப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேலு பேசுகையில்,''மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நேரடியாகவும் 'ஆன்லைன்' மூலமும் பதிவு செய்து
 மாணவர்களுக்கு

கூடலுார்:கூடலுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், வேலைவாய்ப்பு துறை மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.உதவி தலைமையாசிரியர் சங்கர் வரவேற்றார்.முகாமுக்கு, பள்ளி தலைமையாசிரியர் அய்யப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேலு பேசுகையில்,''மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நேரடியாகவும் 'ஆன்லைன்' மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை, பதிவுகளை புதுப்பித்து கொள்ள வேண்டும். தற்போது, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதன் மூலம், வெளிநாடு செல்பவர்களுக்கு இந்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. படித்து முடித்த இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.மாவட்ட பழங்குடி சிறப்பு வழிகாட்டி அலுவலர் கஸ்துாரி பேசுகையில்,''அரசு துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. போட்டி தேர்வை எதிர்கொள்ள, தங்களை தயார்படுத்தி கொள்வது அவசியமாகும்,'' என்றார். முகாமில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X