பொது செய்தி

தமிழ்நாடு

படிமட்ட விவசாயத்திற்கு முக்கியத்துவம் அவசியம்

Added : நவ 29, 2019
Advertisement

ஊட்டி:'படிமட்டம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,' என, அங்கக வேளாண்மை குறித்த 'கிசான் மேளா' வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தோட்டக்கலை மற்றும் மலை காய்கறிகள் துறை சார்பில் அங்கக வேளாண்மை குறித்த 'கிசான் மேளா' நடந்தது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசியதாவது:நீலகிரியில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இயற்கை விவசாயம் குறித்து இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.குறிப்பாக, படிமட்ட விவசாயத்திற்கு விவசாயிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். படிமட்ட விவசாயம் மேற்கொள்வதால் பேரிடர் பாதிப்பை தடுக்க முடியும். கன மழையின் போது விவசாய பயிர்களை பாதுகாக்க முடியும். படிமட்டம் அமைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இன்னசென்ட் திவ்யா பேசினார்.தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் பேசுகையில், '' நீலகிரி, இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதுடன், கலெக்டர் தலைமையில் இயற்கை விவசாயம் குழு அமைக்கப்பட்டது. மாதந்தோறும் விவசாயிகளின் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. அதில், உள்ள தொழில் நுட்பங்களை எப்படி கையாளுவது குறித்து அறிய, 50 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிக்கிம் அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட்டது. 15 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, இயற்கை விவசாயம் செய்ய நிதியும் அளித்து வருகிறோம்,'' என்றார்.நிகழ்ச்சியில், கூட்டுபண்ணை திட்டம், இயற்கை வேளாண்மை தொடர்பான காட்சி அரங்கு அமைக்கப்பட்டது. இயற்கை விவசாயத்தை சிறப்பாக செயல்படுத்திய விவசாயிகளுக்கு உழவன் மற்றும் உழவர் குழு விருது வழங்கப்பட்டது. தோட்டக்கலை திட்டங்கள் குறித்து கையேடு மற்றும் அங்கக வேளாண்மை குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஆவின் தலைவர் மில்லர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X