கூடலுார்:முதுமலை அபயாராணயம் அருகே, காட்டு யானை தாக்கி வனக்காவலர் காயமடைந்தார்.முதுமலை, அபயாராண்யம் அருகே, வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இங்கு வன காவலராக முத்துச்செல்வன், 59, பணியாற்றி வருகிறார்.இவர், கூடலுார் சென்று, இரவு 7:30 மணிக்கு விடுதிக்கு நடந்து சென்றார். அப்பகுதியில், திடீரென வந்த இரண்டு காட்டு யானைகளை, கண்ட அவர் ஓடி உள்ளார். அதில், ஒரு யானை அவரை தாக்கியுள்ளது. விடுதி ஊழியர்கள், சப்தமிட்டு யானைகளை விரட்டி, அவரை காப்பாற்றினர்.பின்னர், கூடலூர் அரசு மருத்துவமனையில், முத்துச்செல்வன் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.