சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் தோண்டிய பள்ளத்தில் சிக்கிய லாரி

Added : நவ 29, 2019
Advertisement

கூடலுார்:கூடலுார் அருகே, சாலை குறுக்கே, கழிவுநீர் குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில், லாரி சிக்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கூடலுார் மைசூர் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே, கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக, நேற்று முன்தினம், இரவு சாலை குறுக்கே, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது.ஒரு பகுதியில், சிமென்ட் குழாய் பதிக்கப்பட்டு மூடப்பபட்டு, அவ்வழியாக வாகனங்கள் செல்ல துவங்கின.நள்ளிரவு, 1:30 மணிக்கு அப்பகுதியை கடக்க முயன்ற லாரி, பள்ளத்தில் சிக்கியது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி, கேரளா, கர்நாடகா இடையே இரவு நேரத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.பொக்லைன் இயந்திரம் மூலம் நீண்ட நேரம் போராடி, லாரி மீட்கப்பட்டு காலை, 6:00 மணிக்கு போக்குவரத்து சீரானது.காலை, 8:00 மணிக்கு, மீண்டும் அங்கு லாரி சிக்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி, கேரளா, கர்நாடகா இடையே இயக்கப்படும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, அவை மீட்கப்பட்டு, 10:00 மணிக்கு போக்குவரத்து சீரானது.இதனால், மக்கள் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X