சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்தவரின் உடலை தோண்டி பிரேத பரிசோதனை: பரபரப்பு

Added : நவ 29, 2019
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து, போலீசார் பிரேத பரிசோதனை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோத்தகிரி பேட்லாடா பகுதியை சேர்ந்த பாலன் என்பவரது மகன் வினித், 23. இவர், கடந்த சில மாதங்களாக, மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார். கடந்த, 26ம் தேதி, மிளிதேன் பகுதியில், தனது தாய் வீட்டில், துாக்கிட்டுள்ளார். கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரும் வழியில் உயிரிழந்துள்ளார். அது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அவசர, அவசரமாக பேட்லாடா பகுதியில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.இத்தகவல், சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, கோத்தகிரி தாசில்தார் மோகனா முன்னிலையில், நேற்று மாலை, உடலை தோண்டி எடுத்து, அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்பு, சில உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. இச்சம்பவம், கோத்தகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X