பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் தராவிட்டால் நடவடிக்கை தகவல் ஆணையர் எச்சரிக்கை

Added : நவ 29, 2019
Advertisement

ஊட்டி:ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு பின், மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:தகவல் அறியும் உரிமை சட்டம் பொதுமக்களுக்கு பொது தகவல் அலுவலர்களுக்கும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்துகிறது. பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, உரிய பதிலை தர தவறும் பட்சத்தில் பொது தகவல் அலுவலர்கள் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர்.கடந்த, 2005ல் துவக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இதுவரை, 30 லட்சம், மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிய பதிலை தராத ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு, தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ., குறித்து, நகர்புறத்தை விட கிராமபுறத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. மக்கள் அரசு துறையை சார்ந்த அனைத்து தகவல்களையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கலாம். இவ்வாறு பிரதாப்குமார் கூறினார்.கூட்டத்தில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X