பொது செய்தி

தமிழ்நாடு

துணை பி.டி.ஓ.,கள் 34 பேர் 'டிரான்ஸ்பர்': உள்ளாட்சி தேர்தல் எதிரொலி

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:மாநில தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 34 துணை பி.டி.ஓ.,கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதால், ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றிய, பி.டி.ஓ., மற்றும் துணை பி.டி.ஓ.,களை இடமாற்றம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் இடமாறுதல் நடந்து வருகிறது.தேர்தல் பணி நிமித்தமாக, சத்துணவு, நுாறு நாள் திட்டம், பொது நிர்வாகம், ஊராட்சிகள் என, பல்வேறு பிரிவுகளில் உள்ள, துணை பி.டி.ஓ.,கள், 34 பேர், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். உடனடியாக, புதிய இடத்தில் பொறுப்பேற்று, அறிக்கை அளிக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X