மழைநீர் தேக்கம்; ரோடு சேதம் கொசு உற்பத்தி பல்கி பெருக்கம்

Added : நவ 29, 2019
Advertisement
 மழைநீர் தேக்கம்; ரோடு சேதம் கொசு உற்பத்தி பல்கி பெருக்கம்

பல்லடம்:சேதமடைந்த ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீரில், கொசுக்கள் உற்பத்தியாவதாக, பல்லடத்தில் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.பல்லடம், மங்கலம் ரோடு - காமராஜர் வீதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில், அமைக்கப்பட்ட ரோடு சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.அவற்றில் மழைநீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது. ரோட்டில், தண்ணீர் தேங்கி நிற்பது தெரியாமல், வாகன ஓட்டிகள், தவறி விழுந்து காயமடைகின்றனர்.இது குறித்து, அப்பகுதியினர் கூறுகையில், 'காமராஜர் வீதியில், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது, இரவு நேரங்களில், படையெடுக்கும் கொசுக்களால், நிம்மதியாக துாங்க முடிவதில்லை.இப்பகுதியில், ரோடு அமைத்து பல மாதங்களாகிறது. இதனால், ரோட்டில், பள்ளங்கள் உருவாகி, மழைநீர் தேங்கி நிற்கின்றன. எனவே, மழைநீரை அகற்றுவதுடன், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X