மாநில தடகள போட்டி சென்சுரி பள்ளி அசத்தல்

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்;திருச்சியில் மாநில அளவிலான தடகள போட்டியில், திருப்பூர் சென்சுரி பள்ளி மாணவ, மாணவியர் பதக்கம் பெற்று அசத்தினர்.அப்போட்டியில், சென்சுரி பள்ளி மாணவர் விஷ்ணுஸ்ரீ, 14 வயது மாணவர் பிரிவு உயரம் தாண்டுதலில் தங்கம், நீளம் தாண்டுதலில் வெண்கலம் வென்றனர். 19 வயது மாணவர் பிரிவில், தனபாலன் கோலுன்றி தாண்டுதலில் வெண்கலம் மற்றும் 1,600 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.பிரேம்குமார், டோனிகிஷன், தரனேஷ், முகமது ஈஸா குழுவினர், 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றனர். இவர்களில் தங்கம் வென்ற மாணவர் விஷ்ணுஸ்ரீ டிச., மாதம் பஞ்சாப்பில் நடக்கும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.மாநில தடகள போட்டியில், வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ரேணுகா, தடகள பயிற்சியாளர் அழகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X