பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு கொசு ஒழிப்பு சிறப்பு முகாம்: வட மாநில தொழிலாளருக்கு விழிப்புணர்வு

Added : நவ 29, 2019
Share
Advertisement
அவிநாசி;டெங்கு கொசுப்புழு ஒழிப்பு குறித்து, வட மாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அவிநாசி வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில், ஒருங்கிணைந்த ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பு முகாம், சேவூர் ரோடு பட்டறை, சூளை, மடத்துப்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், செம்பாகவுண்டம்பாளையம், கருமாபாளையம் உட்பட்ட இடங்களில் நேற்று நடந்தது.கொசு மருந்து தெளிப்பது, விழிப்புணர்வு

அவிநாசி;டெங்கு கொசுப்புழு ஒழிப்பு குறித்து, வட மாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அவிநாசி வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில், ஒருங்கிணைந்த ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பு முகாம், சேவூர் ரோடு பட்டறை, சூளை, மடத்துப்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், செம்பாகவுண்டம்பாளையம், கருமாபாளையம் உட்பட்ட இடங்களில் நேற்று நடந்தது.கொசு மருந்து தெளிப்பது, விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிப்பது உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செம்பாகவுண்டம்பாளையம் ஊராட்சி துவக்கப்பள்ளியில், மாணவ, மாணவியர் மத்தியில் டெங்கு தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சூளையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் டெங்கு தவிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது; காய்ச்சல் பாதிப்புள்ளவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டது.இப்பணியில், வட்டார மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.அவிநாசி வட்டாரம் முழுக்க உள்ள கிராம, நகர்புறங்களில் டெங்கு தவிர்ப்பு முழு சுகாதாரப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது; இந்நிலையில், சுகாதாரப்பிரிவில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்கள், கொசு ஒழிப்புப் பணியாளர்கள் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது என, சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X